வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க 3 மாதம் அவகாசம் – அமைச்சர் சி.வி கணேசன்

Published by
பாலா கலியமூர்த்தி

வேலை வாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு. 

2014, 15 மற்றும் 16-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் சிறப்பு புதுப்பித்தல் சலுகை மூலம் மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி கணேசன் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள், நலவாரிய ஓட்டுநர்கள், விபத்து மரணத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1 லட்சம், ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைப்புசாரா ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இயற்கை மரண உதவித்தொகை ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மேலும், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தரப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை ரூ.2,400 ஆக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியம் என்பதை தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

1 minute ago
”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

35 minutes ago
கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

1 hour ago
“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!

“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…

1 hour ago
கிருஷ்ணகிரி, தர்மபுரி மொத்தம் 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!கிருஷ்ணகிரி, தர்மபுரி மொத்தம் 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

கிருஷ்ணகிரி, தர்மபுரி மொத்தம் 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

2 hours ago
மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

3 hours ago