3 மாத வேலை ரூ.20,000 சம்பளம்.! தமிழக அரசு.!
தமிழகத்தில் இதுவரை 1372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 22 மாவட்டங்களை ஹார்ட்ஸ்பாட் மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துவருவதுடன் , தினமும் பலர் குணமாகி வீடு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில், தமிழக சுகாதார துறையில் 2,215 சுகாதார ஆய்வாளர் நிலை – 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால் காலியாக உள்ள 2,215 பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில், தற்காலிக ஆண் பணியாளர்களை நியமிக்க சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.இவர்களுக்கு மாதம் ரூ.20,000 ஊதியம் வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என்பது அரசாணையில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற தகவலை சில தினங்களில் மாவட்ட ஆட்சியர் மூலமாக அறிவிக்கப்படும்.