திருச்சி அருகே உயர் மின் அழுத்த கோபுரங்கள் சரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

- வயலுக்குள் உயர் அழுத்த மின்கம்பி விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி.
- சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி அருகே உள்ள நாவலூரை அடுத்த கீழக்காடு கிராமத்தை சேர்ந்தவர், ஆறுமுகம் விவசாயம் பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு விவசாயம் பார்த்து வந்தார். இவர் நிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் உள்ளன.
இந்நிலையில், அந்த உயர் மின் அழுத்த கம்பிகள் அறுந்து அவரின் வயலுக்குள் விழுந்து, தண்ணீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இது தெரியாத அவரின் மனைவி ஒப்பாயி அம்மாள், மகன் ராமமூர்த்தி மற்றும் பேரன் குணசேகரன் ஆகியோர் வயலுக்கு உரம் தெளிக்க சென்றனர்.
வயலுக்குள் இறங்கியதும், அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலே மூன்று பெரும் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை மீட்டு, பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025