அத்திவரதரை நேற்று மட்டும் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
அத்திவரதர் வைபவத்தின் 29-ம் நாளான இன்று கூட்டம் சற்று குறைவாக தான் உள்ளது. அத்திவரதர் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் சுவாமி நின்ற திருகோலத்தில் காட்சியளிக்க உள்ளார். அதனால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மாநில நிர்வாகம் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை அதிகரிக்க முடிவு செய்து உள்ளனர்.மேலும் பல இடங்களில் குடிநீர் , கழிப்பறை வசதிகள் அதிகரிக்கவும் முடிவு செய்து உள்ளனர். இந்நிலையில் கடந்த 28 நாள்களில் அத்திவரதரை 41 லட்சம் பேர் தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதில் விடுமுறை நாளான நேற்று மட்டும் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.அதில் கூட்ட நெரிசலில் 33 பேர் மயக்கம் அடைந்தனர்.அவர்களுக்கு தற்காலிக மருத்துவ முகாமில் சிகிக்சை கொடுக்கப்பட்டது.மேல் சிகிக்சைக்காக காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு சென்ற 18 பேரும் இரவே வீடு திரும்பியதாக கூறப்பட்டு உள்ளது.