#BREAKING: நெல்லையில் விபத்து 2 மாணவிகள் உட்பட 3 பேர் பலி..!
ரெட்டியாா்பட்டியில் 4 வழிசாலையில் நிகழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் 2 பேர் உட்பட 3 பேர் உயிரிழப்பு.
திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி நான்கு வழிச்சாலையில் நாகர்கோவிலிருந்து மதுரை நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து எதிர்புறம் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவிகள் 2 மற்றும் கார் டிரைவர் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.