குவிந்த ஊழல் புகார்கள்-நீதியரசர்கள் 3 பேர் அதிரடி நீக்கம்..!
- குவிந்த ஊழல் ,திறமையின்மை புகார் காரணமாக 3 நீதிபதிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்
- நீதிபதிகள் கூட்டத்தில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற நீதிபதிகள் கூட்டத்தில் ஊழல் புகார்கள் மற்றும் திறமையின்மை குறித்து தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் 3 நீதிபதிகள் நீக்கம் நடைபெற்று உள்ளது.மேலும் கூட்டத்தில் நீக்கம் செய்யப்பட்ட 3 நீதிபதிகளுக்கு தலா 5 முறை கிடைக்கும் ஊதிய உயர்வையும் உடன் ரத்து செய்து உத்தரவு பிறபிக்கபட்ட நிலையில் அவர்களை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கவும் உத்தரவிட்டனர்.
மேலும் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிபதியாக உள்ள நீதியரசர் மேல் எழுந்த ஊழல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க நீதிபதிகள் அடங்கிய இந்த குழு உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் 58 லிருந்து 60 வயது என்ற 8 நீதிபதிகளின் பணி வயதை நீட்டிக்க வேண்டும் என்ற பரிந்துரையும் ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.