அதிமுக அரசின் சாதனையை சொல்ல 3 மணிநேரம் காணாது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

Published by
Sulai

தமிழகத்தில் அதிமுக அரசாங்ககம் செய்த சாதனைகளை சொல்லி முடிக்க 3 மணி நேரம் பத்தாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பணப்பட்டுவாடா காரணமாக நடைபெறாமல் இருந்த வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி நடைபெற உள்ளது. வேலூர் தொகுதியில் திமுக சார்பில் கதிர்ஆனந்த் , அதிமுக சண்முகம் உட்பட 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தற்போது, வேலூரில் அரசியல் கட்சி தலைவர்களின்  தேர்தல்  பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

இன்று அதிமுக வேட்பாளராக இருக்கும் சண்முகத்தை ஆதரித்து , தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.அப்போது பேசிய அவர், மத்தியிலும் மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இல்லாத சூழலில் ஸ்டாலின் அவர்கள் எதனை நம்பி வாக்குறுதி தருவார் என்று திமுகவை விமர்ச்சித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும்,  தமிழகத்தில் அதிமுக அரசில் கிராமங்கள் முதல் தொழிற்சாலைகள் வரை இலவச மின்சாரம் தரப்பட்டுள்ளதாகவும் , நாள்தோறும் 14,000 மெகா வாட் மின்சாரம் எந்தவித தடையுறும் இன்றி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு இதுவரை 45 லட்சம் மடிக்கணிகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் இதன் மூலம் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகம் விஞ்ஞானிகள் அதிகம் கொண்ட மாநிலமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.இப்படி எண்ணற்ற சாதனைகளை செய்துள்ள நிலையில் அவற்றை கூற 3 மணி நேரம் காணாது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

 

Published by
Sulai

Recent Posts

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு… இன்றைய நிலவரம் இதோ.!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு… இன்றைய நிலவரம் இதோ.!

சென்னை : கடந்த வாரம் உச்சமடைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. வார தொடக்க நாளான நேற்று…

16 minutes ago

நோட்டீஸ் அனுப்பிய கனிமொழி..தர்மேந்திர பிரதானின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய…

41 minutes ago

“200 பிரமுகர்கள், மரியாதை அணிவகுப்பு”… மொரிஷியஸில் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு.!

போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு…

41 minutes ago

தூத்துக்குடி,சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை தொடரும்! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…

1 hour ago

மழையோ மழை… இன்று முதல் ஆரம்பம்.! எங்கெல்லாம்? சுயாதீன வானிலை ஆய்வாளர் அப்டேட்.!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…

1 hour ago

ஐபிஎல் போட்டிகளை தவறவிடும் கே.எல்.ராகுல்! காரணம் என்ன?

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…

4 hours ago