தரமற்ற சாலைகள் அமைத்ததால் 3 பொறியாளர்கள் பணியிடை நீக்கம்..!

சிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற சாலைகள் அமைத்த காரணத்தால் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், ஆண்டிச்சியூரணி-ஒட்டானம் இடையே தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் சாலையை ஆய்வு செய்யுமாறு நெடுஞ்சாலை துறை அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சாலையின் தரம் மற்றும் அப்பகுதியில் குறைபாடு இருந்துள்ளது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தரமற்ற சாலைகளை அமைத்த பொறியாளர்களான மாரியப்பன், மருதுபாண்டி, நவநிதி ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளனர். மேலும், சாலை பணி ஒப்பந்ததாரர் தர்ஷன் அண்ட் கோ ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025