#BREAKING: ஒவ்வொரு தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள்- சத்ய பிரதா சாகு..!
தமிழக சட்டமன்ற தேர்தல் பணிக்காக 330 கம்பெனி துணை ராணுவ படையினர் கேட்டுள்ளோம் என சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
ஒரு தொகுதிக்கு தலா மூன்று பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு நியமனம், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வீடியோ குழு நியமனம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
45 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழகத்தில் வந்துள்ளன. இரண்டு நாளில் 15 துணை ராணுவத்தினர் வரவுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் பணிக்காக 330 கம்பெனி துணை ராணுவ படையினர் கேட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
அரசு பொது இடங்களில் விதிகளை மீறி வைக்கப்பட்ட 53,404 போஸ்டர்கள், பேனர்கள் நீக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை மீறி போஸ்டர், பேனர் வைத்த புகாரில் 46 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.