தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
கம்பீரமாக இருந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்தவகையில், விஜயகாந்துக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தைராய்டு பிரச்சினையால் மிகுந்த அவதிப்பட்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பிரச்சனையால் அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்த பிறகு விஜயகாந்துக்கு ஓரளவு உடல்நிலை முன்னேற்றம் தெரிந்தது.
இதனைத்தொடர்ந்து, சமீபத்தில் உடல் நலக் குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வரும் விஜயகாந்த், கடந்த 18-ம் தேதி சென்னை நந்தப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டாா். மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கடந்த வியாழக்கிழமை வீடு திரும்பியதாக கூறப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வலது காலில் 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து விரல்களை அகற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது. விஜயகாந்தின் வலது கால் கட்டை விரல் முதல் மூன்று விரல்கள் அகற்றப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…