3 யானைகள் உயிரிழந்த விவகாரம்: ரயில் ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு..!
3 யானைகள் பலியான விவகாரத்தில் ரயில் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் நேற்றிரவு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் யானை உட்பட மூன்று யானைகள் மீது கேரளாவிலிருந்து மங்களூர்-சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் ஒன்று மோதியது. இதில் யானைகள் படுகாயமடைந்து இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் மற்றும் வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு மதுக்கரை வனச்சரக அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் விரைந்து வந்தனர். இருப்பினும் அடுத்தடுத்து யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. யானைகள் பலியான சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கோவை அருகே 3 யானைகள் பலியான விவகாரத்தில் ரயில் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.