கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் தலைமையில்,மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு,அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிலையச் செயலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.அப்போது,கட்சியின் நிர்வாகிகளிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.துரை வைகோ மதிமுக தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில்,மதிமுகவில் துரை வைகோவிற்கு பதவி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுக்குழுவில் பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில் 3 மாவட்ட செயலாளர்களும் கட்சியிலிருந்து தற்காலிகமாக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
அதன்படி,சிவகங்கையில் செவந்தியப்பன்,விருதுநகரில் சண்முகசுந்தரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.மேலும்,இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்கும் என வைகோ தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…