மதிமுகவில் இருந்து 3 மாவட்ட செயலாளர்கள் நீக்கம் – வைகோ அறிவிப்பு!

Default Image

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் தலைமையில்,மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு,அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிலையச் செயலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.அப்போது,கட்சியின் நிர்வாகிகளிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.துரை வைகோ மதிமுக தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில்,மதிமுகவில் துரை வைகோவிற்கு பதவி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுக்குழுவில் பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில் 3 மாவட்ட செயலாளர்களும் கட்சியிலிருந்து தற்காலிகமாக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

அதன்படி,சிவகங்கையில் செவந்தியப்பன்,விருதுநகரில் சண்முகசுந்தரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.மேலும்,இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்கும் என வைகோ தெரிவித்துள்ளார்.

mdmk vaiko

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்