துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பொறுப்பில் இருந்த சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய வட்டாச்சியர்கள் சஸ்பெண்ட் – தமிழக அரசு நடவடிக்கை.
கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் தனியார் தாமிர உருக்கு ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உண்மை தன்மை ஆராய நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை அண்மையில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் சம்பந்தப்பட்டவர்களாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டவர்கள் மீது தமிழக அரசு துறைரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
ஏற்கனவே, இதில் சம்பந்தப்பட்ட அப்போதைய காவல் ஆய்வளர் திருமலை தற்போது நெல்லை உதவி ஆணையாராக இருக்கிறார், காவலர்கள் சுடலைக்கண்ணு தற்போது நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலைத்தில் முதல் நிலை காவலராக இருக்கிறார். சதிஷ், சங்கர் என 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பொறுப்பில் இருந்த சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய வட்டாச்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…