#Breaking: பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்து.. 3 பேர் உயிரிழப்பு!

வேலூர் மாவட்டம், லத்தேரி பேருந்து நிலையத்தில் உள்ள பட்டாசு கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி 3 பேர் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம், லத்தேரி பேருந்து நிலையத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்க போராடினார்கள். கடையின் உரிமையாளர் மோகன் கடைக்குள் சிக்கியுள்ள நிலையில், அவரை மீட்கவும் தீயணைப்பு துறையினர் விரைந்தனர்.
இந்த தீ, அருகில் உள்ள வாகனங்களில் பரவி, வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.