3 கோரிக்கை…சேப்பாக்கத்தில் விவசாயிகள் சங்கம் போராட்டம்..!
விவசாயிகள் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விளைநிலங்களில் அமைக்கக்கூடிய உயர்அழுத்த மின் கோபுரங்களுக்கு நிலத்திற்கான இழப்பீடு தொகையை உயர்த்தக் கோரியும், எட்டு வழி சாலையை முழுமையாக கைவிட வேண்டும் என்ற அறிவிப்பை அறிவிக்கவேண்டும், அதே போல கரும்பு ஆலைகள் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை ரூ.1700 கோடிக்கு மேலாக உள்ளது. இதைத்தொடர்ந்து, விவசாயிகள் போரட்ட இடத்தில் இருந்து கோட்டையை நோக்கி முற்றுகையிட புறப்பட்டனர். ஒரு புறம் விவசாயிகள் போரட்டம், மறுபுறம் இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையே ஆன 2-வது டெஸ்ட் போட்டிக்கு டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.