கூட்டணி அமைக்க 3 நாட்கள் அவகாசம்…! விருப்பமுள்ளவர்கள் வரலாம்…! – கமலஹாசன்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கூட்டணி அமைக்க 3 நாட்கள் அவகாசம் கொடுப்பதாகவும், விருப்பமுள்ளவர்கள் வரலாம் என்றும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்காள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அவர்கள், சென்னை மாங்கொல்லையில் பிரச்சார கூட்டம் நடைக்கேற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் நேரத்தில் சிலருக்கு தமிழ் மீது பற்று வருகிறது. இதை நம்பி ஏமாந்து யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும், இங்கு கல்வி, எதிர்காலம் எதுவும் விற்பனைக்கு அல்ல. என்னையும் சிலர் விலைக்கு வாங்க பார்த்தார்கள். ஆனால், தான் விலை போகவில்லை என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இன்றும், நாளையும் அடுத்தடுத்த நல்ல செய்திகள் வரவுள்ளது என்றும், கூட்டணி அமைக்க 3 நாட்கள் அவகாசம் கொடுப்பதாகவும், விருப்பமுள்ளவர்கள் வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.