சென்னையில் 3 நாட்கள் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி, தமிழகத்தினைச் சார்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் கலைவிழா, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் ஆண்டுதோறும் சென்னையில் மூன்று நாட்கள் நடத்தப்படும்.
இதற்கென தொடரும் செலவினமாக கலை பண்பாட்டுத்துறையின் ஆண்டு வரவு செலவு ஒதுக்கீட்டிலிருந்து ரூ.91 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து, 3 நாட்கள் ‘நம்ம ஊரு திருவிழா’ நடத்த அரசு அனுமதித்து ஆணை வெளியிட்டுள்ளது.
அரசாணையினை செயல்படுத்தும் வகையில் ‘நம்ம ஊரு திருவிழா’ எனும் தலைப்பில் தமிழகத்தின் பாரம்பரியமான கிராமியக் கலைகளை வெளிப்படுத்தும் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு, சென்னையில் 7 இடங்களில் 14.01.2022, 15.01.2022, 16.01.2022 ஆகிய மூன்று நாட்கள் கலை விழா நடைபெறவுள்ளது. அதுமட்டுமல்லாமல் 7 வெளி மாநில கிராமியக் கலைக்குழுவினர் இவ்விழாவில் பங்குகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…