அங்கொட லொக்கா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காதலி உட்பட 3 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.
இலங்கையைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா என்ற லசந்த பெரேரா, கோவையில் தனது காதலியால் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டது இந்த வழக்கு தற்பொழுது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அங்கொட லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், அவர்களை இன்று சிபிசிஐடி அதிகாரிகள் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்பொழுது கைதான 3 போரையும் 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விசாரணை முடிந்ததும், அவர்கள் மூன்று பெரையும் 15-ம் தேதி, மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…