திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழப்பு – ஆட்சியர் விளக்கம்
3 குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணம் பரிசோதனைகளுக்கு பின்பே தெரியவரும் என திருப்பூர் ஆட்சியர் விளக்கம்.
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்ததாகவும். மேலும் சில குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.
இதுகுறித்து, திருப்பூர் ஆட்சியர் 3 குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணம் பரிசோதனைகளுக்கு பின்பே தெரியவரும். சிகிச்சை பெற்று வரும்சிறுவர்களின் சிறுநீர், மலம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.