நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்கள்!
கோவை மாவட்டம் மதுக்கரை சூட்டிங் ரேஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மற்றும் ரமேஷ்.இவர்களின் மகன்கள் சிவபிரகாஷ்,கார்த்திக்,தினேஷ் ஆவர். இந்நிலையில் ஏசிசி சிமெண்ட் ஆலை அருகே கல் குவாரி ஒன்று பாராமரிப்பில்லாமல் உள்ளது.
அங்கு அனைவரும் குளிக்கும் அளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.அங்கு சென்று சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் குளித்து விளையாடுவர்.இந்நிலையில் வழக்கம் போல் அந்த மூன்று சிறுவர்களும் குளித்து விளையாடிவந்துள்ளனர்.
அப்போது உடைகளை கரையில் கழற்றி வைத்துவிட்டு அவர்கள் குளிக்க சென்ற போது எதிர்பாராத வகையில் ஒரு சிறுவன் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.அப்போது அவனை காப்பாற்ற மற்ற இருவரும் சென்றுள்ளனர்.
அப்போது மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இதையடுத்து அவ்வழியாக சென்ற சிலர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.அதன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் சிறுவர்களின் உடலை மீட்க முயற்சி செய்து அதில் தோல்வியடைந்தனர்.
அதன் பின்பு தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு சிவபிரகாஷ் மற்றும் தினேஷ் ஆகியோரின் உடலை மீட்டுள்ளனர்.நீண்ட நேரம் தேடுதலுக்கு பின்னர் கார்த்திக்கின் உடலை மீட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து மூன்று சிறுவர்களின் உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு தொடுத்து விசாரணை நடத்தி வருகின்றன.
மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.