பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பிய 3 பெண்கள் கைது!
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பேசியதற்காக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பேசியதற்காக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனி, இப்ராகிம் மற்றும் நைனார் பாத்திமா மூன்று பேரும் வாட்சப் மூலம் அவதூறு பரப்பியதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில், எஸ்.பி.பட்டினம் போலீசார் இவர்கள் மூவர் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.