புதையலுக்காக வீட்டில் 20 அடி குழி தோண்டி மாந்திரீக பூஜை செய்த 3 பேர் கைது…!
புதையலுக்காக வீட்டில் 20 அடி குழி தோண்டி மாந்திரீக பூஜை செய்த 3 பேர் கைது.
பெரம்பலூர் மாவட்டத்தில், ஒரு கிராமத்தில், ஐஸ் வியாபாரி பிரபு என்பவர் வீட்டில் புதையல் எடுப்பதற்காக சிலர் குழி தோண்டி வருவதாக, போலிஸாருக்கு தொலைபேசி வாயிலாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டிற்குள், மாந்திரீக பூஜை செய்து, 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஐஸ் வியாபாரி பிரபு உள்ளிட்ட 7 பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு. இதனையடுத்து, பரமத்தி வேலூர் பூசாரி கிருஷ்ணமூர்த்தி, அவரது உதவியாளர் வெள்ளியங்கிரி, பிரபாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.