தூத்துக்குடியில் நண்பனை உயிரோடு புதைத்த முயன்ற 3 பேர் கைது…!
தூத்துக்குடியில் நண்பனை உயிரோடு புதைத்த முயன்ற 3 பேர் கைது.
தூத்துக்குடி மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த அஜித்குமார் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவர் தன் நண்பர்களான தேவ் ஆசீர்வாதம், தர்ம முனிசாமி, இசக்கி மணி ஆகியோருடன், ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில்,தேவ் ஆசீர்வாதம் செல்போன் வாங்குவதற்காக .ரூ.5,000 கடன் வாங்கியுள்ளார். முத்தையாபுரம் காட்டுப்பகுதியில், அந்த பணத்தில் நண்பர்கள் 4 பேரும் மது அருந்தியுள்ளனர். இதனையடுத்து, அஜித்குமார் தன கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது, அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில், கத்தி மற்றும் கம்பியால் அஜித்குமாரை தாக்கிய நண்பர்கள், மதுபோதை தலைக்கேறிய நிலையில், அஜித்குமாரை உயிரோடு புதைக்கவும் முயற்சித்துள்ளனர். அஜித்குமாரின் மார்பளவு மணலை மூடிய நிலையில், அஜித்குமாரின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் அவரை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தேவ் ஆசீர்வாதம், தர்ம முனிசாமி, இசக்கி மணி ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.