மதுரையில் வாகன தணிக்கையின் போது பிடிபட்ட 3 பேர்.! போதை மாத்திரைகள் விற்றதால் கைது.!

Default Image

மதுரையில் போதை மாத்திரைகளை விற்கும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் உள்ள மெஜூரா கோட்ஸ் பாலத்தின் கீழ் கரிமேடு காவல் உதவி ஆய்வாளர் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்களின் மீது சந்தேகமடைந்த போலீசார் மூவரையும் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் கையிலிருந்த போதை மாத்திரைகள் போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்கள் வில்லாப்புரம் மீனாட்சி நகரை சேர்ந்த பிரதீப்குமார் (26), பொன்னகரம் 3வது தெருவை சேர்ந்த பாலமுருகன் (18),பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்த ராம்குமார் (23) என தெரிய வந்ததை அடுத்து மூவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பிரதீப் குமார் அவர்களின் சகோதரரான பிரவீன்குமார் ஒரு மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். அங்கிருந்து தூக்க மாத்திரைகள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் மாத்திரைகளை போதை மருந்து என கூறி பல இளைஞர்களிடம் அதிக விலைக்கு விற்பதும், அவர்களை போதைக்கு அடிமையாக்குவதும் தெரிய வந்தது. அதனையடுத்து பிரதீப் குமார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு வேறு எவருடனாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்