அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவ கல்லூரிகளாகச் செயல்பட்டு வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும், ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவ கல்லூரிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளதுபோல் கட்டணத்தை அதிமுக அரசு உயர்த்தி பேரின்னலை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் ரூ.13,670 பல் மருத்துவ கல்லூரி கட்டணம் ரூ.11,610 இந்த கட்டணங்களை இந்த இரண்டு கல்லூரிகளிலும் வசூலிப்பது தானே நியாயம். ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ. 5.44 லட்சம், ஈரோடு ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் கல்வி கட்டணம் ரூ.3.85 லட்சம் உயர்த்தியுள்ளது என அதிமுக அரசு. அரசுக்கல்லூரிகள் என்று அறிவித்துவிட்டு, தனியார் கல்லூரியில் உள்ளது போல் கல்வி கட்டணம் வசூல் செய்வது ஏன்? கட்டணம் செலுத்த 30. 11. 2020 இறுதி கெடு விதிக்கப்பட்டு விழிபிதுங்கி நிற்கிறார்கள் மாணவர்கள்.
இது தவிர போஸ்ட் மெட்ரிக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வருமான வரம்பு ரூ.2 லட்சம் என்று நிர்ணயிப்பது, பல மாணவர்களும் உதவி தொகையை பெற முடியாத நெருக்கடியை ஏற்படுத்தும். வருமான வரம்பை ரூ 8 லட்சம் உயர்த்தவேண்டும். நேற்று மாணவர்கள் என்னை சந்தித்தனர். திமுக உறுதுணையாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…