3 மாதங்களுக்கு பொருட்களை வாங்கவில்லை என்றாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது!அமைச்சர் காமராஜ் அதிரடி அறிவிப்பு
3 மாதங்களுக்கு பொருட்களை வாங்கவில்லை என்றாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் திமுகவின் மா.சுப்பிரமணியம், 3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என மத்தியரசு தகவல் தெரிவித்துள்ளது என்று கூறினார். இதனால் பல ஊர்களுக்கு சென்று தொழில் செய்வோர் பாதிக்கப்படுவர் என்று தெரிவித்தார். இதற்கு பதில் கூறிய அமைச்சர் காமராஜ், 3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என்ற அறிவிப்பை தமிழகம் பின்பற்றாது என்று கூறினார்.மேலும் மத்திய அரசு 3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்ய அறிவுரை மட்டும் கூறியுள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.மத்திய அரசு அறிவுரை மட்டும் தான் வழங்கியதோ தவிர அறிவிப்பு வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.