3 நிறுவனங்களுக்கு தென்னையில் இருந்து நீரா வடிப்பதற்கு உரிமம்!
தென்னைகளில் இருந்து நீராபானம் வடிப்பது, நீரா பானத்திலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கான உரிமங்களை 3 நிறுவனங்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.
விநாயகா தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனம், புதுக்கோட்டை தென்னை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம், கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இன்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த உரிமங்களை வழங்கினார்.
மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தில் பதிவு செய்த நிறுவனங்கள் மட்டுமே நீரா பானத்தையும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படும் என்றும், தென்னை விவசாயிகளுக்கு நீரா வடிக்கவும், நீரா பானத்தில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யவும் தமிழக அரசு பயிற்சி வழங்கும் என்றும் அரசு செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.