இன்று நடைபெற இருந்த 3 சிறார் திருமணங்களை, ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
நயினார்கோவில் அருகே கரைமேல்குடியிருப்பு, பரமக்குடி அருகே எலந்தைக்குளம், ஏர்வாடி ஆகிய இடங்களில் நடைபெற இருந்த திருமணங்களில், மணப்பெண்கள் 18 வயது நிறைவடையாத சிறுமிகள் என ராமநாதபுரம் மாவட்ட சைல்டு லைனுக்கு தகவல் வந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட சமூகநல அலுவலர் குணசுந்தரியிடம் புகார் அளிக்கப்பட்டு, அவரது தலைமையில் 3 இடங்களிலும் நேரில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், மணப்பெண்கள் மூவருமே 18 வயது நிறைவடையாத சிறுமிகள் என்பது உறுதியானது. அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில், 3 திருமணங்களையும் நிறுத்துவதாக பெற்றோர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…
மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…