3 கைதிகள் குன்னூர் கிளைச் சிறையில் இருந்து தப்பியோட்டம்!
நீலகிரி மாவட்டம் வண்டிச்சோலை பகுதியில் கடைகள் வீடுகளில் கொள்ளையடித்தது தொடர்பாக குன்னூரைச் சேர்ந்த தவசி, உத்தமபாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், மணிவண்ணன் ஆகியோரை மேல் குன்னூர் போலீசார் கடந்த 4-ஆம் தேதி கைது செய்தனர்.
குன்னூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் மூவரும் இன்று காவலர்கள் உணவுக்கு சென்ற நேரத்தை பயன்படுத்தி சிறை அறையின் ஜன்னல் கம்பியை உடைத்து வெளியேறி, சிறையின் பின்பக்க மதில் சுவரை ஏறிக் குதித்து தப்பியோடினர். இந்நிலையில் சிறை வளாகத்தை ஒட்டியுள்ள மவுண்டன் ஹோம் தனியார் பள்ளி வளாகத்தில் ஒரு புதர் மறைவில் பதுங்கியிருந்த மூவரையும் போலீசார் வளைத்துப் பிடித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.