சேலத்தில் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநாடு தொடங்கியது. இந்த இளைஞரணி மாநாட்டிற்கு முதல்வர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், இளைஞர் அணியினர் நேற்று மாலை மாநாட்டு திடலில் திரண்டு வந்தனர். இதையெடுத்து, நேற்று மாலை 1,500 டிரோன்களின் வர்ணஜாலம், பைக் பேரணியுடன் மாநாடு களைக்கட்ட தொடங்கியது.
திமுகவின் இளைஞரணி முதல் மாநாடு கடந்த 2007 ஆம் ஆண்டு திருநெல்வேலி நடைபெற்றது. இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தினார். அதன் பிறகு இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெறுகிறது.
சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த சில நாட்களாக செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மாநாடு பந்தலுக்குள் 1.5 லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே எல்இடி திரைகள் வைத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கட்சிக்கொடி ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். இளைஞர்களின் மாநாட்டில் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின், திமுக நிர்வாகி, லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டு திடலில் பெரியார், அண்ணா, கலைஞர், அன்பழகன் சிலைகளுக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
100 அடி உயர கம்பத்தில் திமுக கொடி ஏற்றப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 22 தலைப்புகளில் சொற்பொழிவரங்கம் நடைபெற உள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…