2 வது நாள் போராட்டம் : கமல் நநேரில் சென்று ஆதரவு

- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
- சென்னை பல்கலைக்கழகத்தில் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
மத்திய அரசானது கடந்த சில தினங்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. அந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. அதிலும், வட மாநிலங்கள் அசாம்,மேற்குவங்கம் ,டெல்லி என பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரமாகி வருகிறது.இந்தவகையில் டெல்லி ஜாமியா கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழக மாணவர்களை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தில் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.அவருக்கு கேட்டுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்ததால் கேட்டில் இருந்தே தனது ஆதரவை மாணவர்களிடம் தெரிவித்தார்.