2வது நாள் விசாரணை.. கட்சியின் அடிப்படை விதியை மாற்ற முடியாது – இபிஎஸ் தரப்பு வாதம்
கட்சியின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்கும் வகையில் செயல்படுவதாக ஓபிஎஸ் குற்றச்சாட்டுவது தவறு என இபிஎஸ் தரப்பு வாதம்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சஹீன்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு முன் விசாரணை நடைபெறுகிறது.
அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதாடி வருகிறார். அவர் கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர், கட்சி அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்த்தேடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மாற்ற முடியாது. பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை எம்ஜிஆர் வகித்தார்.
எம்ஜிஆர் கட்சி துவங்கியபோது கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கட்சி விதியை வகுத்தார். ஒருமுறை எழுதிவிட்டால் கட்சியின் அடிப்படை விதியை மாற்ற முடியாது. அரசியல் கட்சிகளுக்கு சித்தாந்தம் இருக்குமே தவிர ‘அடிப்படை கட்டமைப்பு’ என்ற ஒன்று கிடையாது. கட்சியின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்கும் வகையில் செயல்படுவதாக ஓபிஎஸ் குற்றச்சாட்டுவது தவறு.
மேலும், பொதுக்குழு கூட்டத்தில் எடுத்த கட்சி விதி திருத்தங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. எனவே, கட்சி விதிகளை கட்சியில் இருக்கும் வரை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும், இல்லாவிட்டால் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என வாதம் முன்வைக்கப்பட்டு வருகின்றனர்.