2G வழக்கில் திடீர் திருப்பம்! தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு..

அமலாக்கத்துறை 2ஜி அலைக்கற்றை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இது திமுகவினருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. அந்நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியோரின் தரப்பின் மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ராசா மற்றும் கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளதாக ஏ.என்.ஐ எனப்படும் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, சிபிஐ தரப்பிலும் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024