சென்னையில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா.! இன்று 94 பேருக்கு தொற்று .!

தமிழகத்தில் இன்று மட்டும் 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், 94 பேர் சென்னைவாசிகள் ஆவார்.
தமிழகத்தில் , இன்று மட்டும் 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 82 பேர் கொரோனாவால் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1210 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில், இன்று மட்டும் 94 பேர் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 768 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று இரண்டு உயர்ந்ததால் இதுவரை மொத்த பலி 27 ஆக உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!
April 11, 2025
தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!
April 11, 2025