திருச்சியில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 28 பேர் மத்திய சிறையில் அடைப்பு!

Default Image

திருச்சி -திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் ,நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் கட்டை ,கற்கள் மற்றும் பாட்டில்கள் கொண்டு மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இந்த தாக்குதலில் 20 -க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. 15- க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயத்துடன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய உதவி ஆணையர் மணிகண்டன் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 17 பேரும் , நான்காம் ஆண்டு மாணவர்கள் 11 பேரின் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சோமசுந்தரம் வழக்கு பதிவு செய்யப்பட்ட 28 மாணவர்களையும் 7 நாள்கள் சிறையில் அடைக்க உத்தரவு விட்டார்.இதை தொடர்ந்து போலீசார் திருச்சி உள்ள  மத்திய சிறையில் மாணவர்களை அடைந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்