“மதுக்கடைகளை மூட வேண்டும்” தவெக செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
நீட் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை தவெக செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இக்கூட்டத்தில் ஏகமனதாக 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதிராக தீர்மானம், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம். மேலும், மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கொள்கை தீர்மானம், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.
மாநில தன்னாட்சி உரிமை, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு ,மாதந்தோறும் மின் கணக்கீடு முறை, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு, மதுக்கடை மூடல் , மின்சாரம், பால் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு கண்டனம் உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன
அதிலும் குறிப்பாக, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாக தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவை வருமாறு:-
தவெக செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்! pic.twitter.com/Y7yLyvgvu4
— Dinasuvadu (@Dinasuvadu) November 3, 2024