நெய்வேலி வன்முறை : 28 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.!
நெய்வேலி என்எல்சி நிறுவனம் மேல்வலையமாதேவி பகுதியில் விவசாய நிலங்களை கையகப்படுத்திய முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாமக முற்றுகை போராட்டம் நடத்தியது. இதில்கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால் அங்கு பெரும் பதற்றம் உண்டானது. இதில் பல காவலர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது வீடியோ ஆதாரங்களை கொண்டு 28 பேரை காவல்துறையினர் கைது செய்து நெய்வேலி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். அவர்களுக்கு 15 நாள் காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதில் 2 சிறார்கள் அரசு கூர்நோக்கு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.