27 வேணும்., 22 தான் முடியும் – திமுக – காங்கிரஸ் இடையே தொடர் இழுபறி.!

Default Image

27 இடங்களை ஒதுக்குமாறு திமுகவிடம் காங்கிரஸ் கட்சி கேட்பதாகவும், 22 வரை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

திமுக, காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு நாளை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனிடையே நேற்று வரை சட்டப்பேரவையில் 18 தொகுதிகள் வரை ஒதுக்குவதாக கூறி வந்த திமுக, தற்போது சற்று முன்னேறி 22 வரை தருவதற்கு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் ஆரம்பத்தில் 35 இடங்கள் கேட்டார்கள், பின்னர் படிப்படியாக குறைந்து 30 வரை வந்து, தற்போது 27 இடங்கள் போதுமானது என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் கன்னியாகுமரி மக்களவை தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்கிறார்கள். முதல்கட்ட பேச்சுவார்த்தையின்போது 18 தொகுதிகள் தான் தர முடியும் என கூறிய திமுக, இப்பொது 22 வரை வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் 31 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருந்த காங்கிரஸ், 27 வரை பெற்றுக்கொள்ள ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்ட நிலையில், 22 தொகுதிகளில் இருந்து 27 தொகுதிகளுக்குள் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி உடனப்படு ஏற்படலாம் என்றும் நாளை இரவுக்குள் இதற்கான இறுதி முடிவு எட்டப்பட்டு, விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் கூறப்படுகிறது. ஏனென்றால், இதற்கு அடுத்து எந்தெந்த தொகுதிகள் என பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால், முடிவு விரைவில் எட்டப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்