[Image source : Twitter@@TNDIPRNEWS]
தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமையிட ஐஜியாக ஆசியம்மாள் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார. அவர் முன்னதாக பொருளாதார குற்றப்பிரிவு டிஐஜியாக பொறுப்பில் இருந்தார்.
சென்னை மாநகர வடக்கு சட்ட ஒழுங்கு கூடுதல் ஆணையராக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தென்மண்டல ஐஜியாக பொறுப்பில் இருந்தவர்.
மதுரை காவல் ஆணையராக லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை தலைமை கூடுதல் ஆணையராக பொறுப்பில் இருந்தவர்.
சென்னை போக்குவரத்து காவல் ஆணையராக சுதாகர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கோவை ஐஜியாக பொறுப்பில் இருந்தவர்.
தென்மண்டல டிஐஜியாக நரேந்திரன் நாயர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை காவல் ஆணையராக பொறுப்பில் இருந்தவர்.
திருச்சி மாநகர காவல் ஆணையராக காமினி நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐஜியாக புவனேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபியாக வன்னிய பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றச்சடிப்பு பிரிவு ஏடிஜிபியாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை தொழில்நுட்ப பிரிவு ஐஜி சந்தோஷ் குமார், கூடுதல் பொறுப்புகளாக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மற்றும் இணை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
TANGETCO லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக பிரிஜ் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவு மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் ஜிஜிபியாக அபின் தினேஷ் மொடக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொருளாதார குற்றப்பிரிவை ஏடிஜிபியாக இருந்துள்ளார்.
மதுரை சரகடி ஐஜியாக ரம்யா பாரதி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் இருந்த பொன்னி காஞ்சிபுரம் சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் சரக டிஐஜியாக பொறுப்பில் இருந்த பகலவன், திருச்சி சரக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை சரக டிஐஜியாக சரவண சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் திருச்சி சரக டிஜிபியாக பொறுப்பில் இருந்தவர்.
சிஐடி நுண்ணறிவு பிரிவு டிஐஜியாக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நெல்லை மாநகர காவல் துறை ஆணையராக பொறுப்பில் இருந்தவர்.
சென்னை காவல் ஆணையராக தலைமையக ஐஜியாக கபில்குமார் சரத்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாக இருந்தவர்.
இன்டெலிஜென்ஸ் சிஐடியாக ராஜேந்திரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருநெல்வேலி சரக டிஐஜியாக இருந்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…
சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…
சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…