தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்க தாமதம் ஏற்பட்டது. காலை முதலே பொதுமக்களுடன் பிரபலங்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.
இந்த தேர்தலில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6,26,67,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்.அவர்கள் சிரமமின்றி வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 26.29 சதவித வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 28.33 சதவீதமும், குறைந்தபட்சமாக நெல்லையில் 20.98 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், சென்னையில் 23.67 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…