தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு மது விற்பனை..!
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை காரணமாக கொரோனா தொற்றின் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இதனால், தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றை அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று முழு ஊரடங்கை தொடர்ந்து, நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சென்னை – 58.37 கோடி.
திருச்சி – 48.57 கோடி.
சேலம் – 47.79 கோடி.
மதுரை – 49.43 கோடி.
கோவை – 48.32 கோடி.
சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக 58.37 கோடிக்கு, அடுத்தபடியாக மதுரை மண்டலத்தில் 49.43 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.