இன்றிரவு முதல் நாளை வரை 250 சிறப்பு பேருந்துகள்.! போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு.!

Default Image
  • தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு  குடமுழுக்கு விழா வரும் 5-ம் தேதி கோலகலமாக நடைபெறவுள்ளது.
  • குடமுழுக்கு திருவிழாவிற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சென்று கண்டுகளிக்க இன்றிரவு முதல் நாளை வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு  குடமுழுக்கு விழா வரும் 5-ம் தேதி கோலகலமாக நடைபெறவுள்ளது. இதனால் தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு சீரமைக்கும் பணிகள், அலங்கார பணிகள் மற்றும் தங்கம் பூசப்பட்ட கலச கும்பங்கள் கோவிலின் கோபுரத்தில் அமைப்பது போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடமுழுக்கு விழாவிற்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக முன் எச்சரிக்கை நடவெடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில், குடமுழுக்கு திருவிழாவிற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சென்று கண்டுகளிக்க இன்றிரவு முதல் நாளை வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனை கோயம்பேட்டில் உள்ள குறுங்காளீஸ்வரர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலந்து கொண்ட அமைச்சர், முன்னதாக கோவிலில் நடந்த சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கார், தஞ்சைக்கு செல்லும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அந்தந்த பகுதிகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்