ஆர்ப்பாட்டம் நடத்திய திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு

Default Image

சென்னையில் நேற்று மனு தர்ம நூலை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய திருமாவளவன் உள்பட 250 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 

பெண்களை காலம் காலமாக இழிவுபடுத்தி, பெண்கள் படிக்கக்கூடாது, வேலைபார்க்கக்கூடாது, ஆண்களை விட பெண்கள் எல்லாவற்றிலும் குறைவானவர்கள், அவர்களுக்கு எல்லாவிதமான தகுதியும் கிடையாது என்று மனுதர்மம் நூல் தெரிவிப்பதாக கூறி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் “மனுதர்மம்” சனாதன நூலைத் தடைசெய்ய மத்திய, மாநில அரசுகளை வலிறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்திய  திருமாவளவன் உள்பட 250 பேர் மீது ,அரசு உத்தரவு மீறல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்