250 கி.மீ. வேகத்தில் சுவர் மீது மோதிய ஏர் இந்தியா விமானம்….!!

Default Image

விமானத்தில் பைலட் மற்றும் முதன்மை அதிகாரிகள் ஆகியோரிடம் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி விமான நிலைய ஓடுபாதையில் இருந்து இன்று காலை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 250 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. போயிங் 737 -800 ரக விமானத்தில் மொத்தம் 136 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் திருச்சியில் இருந்து துபாய்க்கு செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.

se63cbbgதுபாய்க்கு செல்லவிருந்த விமானம் விபத்துக்குள்ளானது

இந்த நிலையில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமான நிலைய சுற்றுச் சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. குறைந்த உயரத்தில் பறந்ததால், விமான நிலைய சுற்றுச் சுவரில் சக்கரங்கள் மோதிச் சென்றன.

95k34lcgமுன்னெச்சரிக்கையாக மும்பையில் தரையிறக்கம் செய்யப்பட்டது

இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று காலை 1.30-க்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் நோக்கி விமானம் புறப்பட்டது. தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக கோளாறு ஏற்பட்டதில், விமானத்தின் அடிப்பாகம் விமான நிலையத்தின் சுற்றுச் சுவரில் மோதிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இறுதியாக துபாய் செல்லும் அளவுக்கு விமானத்திற்கு தகுதிகள் உள்ள என்று விமான பைலட் தெரிவித்தார். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் துபாய்க்கு செல்வதை தவிர்த்து மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விமானத்தின் பைலட் கேப்டன் டி.கணேஷ் பாபு, முதன்மை அதிகாரி கேப்டன் அனுராக் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ujspsoroகடந்த 2010 மே மாதத்தின்போது, ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 – 800 ரக விமானம் துபாய்க்கு சென்று கொண்டிருந்தது. அன்றைக்கு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடுதளத்தில் தடுமாறிச் சென்று விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 158 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்