திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் மாவட்ட ஊர்காவல்படையில் 25 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15, 2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Thiruvallur Home Guard Job Vacuncies

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது திருவள்ளூர் மாவட்ட ஊர்காவல்படைக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவையின் படி,  திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல்படையில், காலியாக உள்ள 25 பணியிடங்களுக்கான (ஆண்கள்) ஆள் தேர்வு நடைபெறவுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு : விண்ணப்பதாரரின் வயது 20 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி.

இருப்பிட தகுதி :  விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும். அவரது இருப்பிடமானது. திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குள் இருத்தல் வேண்டும்.

பொது தகுதி :  பொதுநல சேவை, தன்னார்வ தொண்டு செய்ய விருப்பமுடையவராக இருத்தல் வேண்டும்.

மேற்படி தகுதிகள் உள்ள அனைவரும் திருவள்ளூர் மாவட்ட ஊர்காவல்படை அதிகாரபூர்வ இணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான ஆவண நகல்களை இணைத்து, திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைக்க வேண்டிய ஆவண நகல்கள் :

  • பிறப்புச் சான்றிதழ்
  • ஆதார் அட்டை
  • கல்வி தகுதிக்கான சான்றிதழ்கள்
  • தற்போதைய புகைப்படம்-2 (Passport Size Photo)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 15, 2025க்கு அளிக்க வேண்டும். அந்த ஆவணங்களில் இருந்து தேர்வு செய்யும் நபர்கள் அடுத்தகட்ட தேர்வு முறைக்கு அழைக்கப்படுவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்