திமுகவின் 2-வது இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தின் இன்று திமுக இளைஞரணயின் 2-வது மாநில மாநாடு இன்று தொடங்கி உள்ளது. சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த சில நாட்களாக செய்யப்பட்டது. மாநாடு பந்தலுக்குள் 1.5 லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே எல்இடி திரைகள் வைத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரமாண்டமாக தொடங்கியது திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு..!
இந்த மாநாட்டுக்கான நிகழ்ச்சி என்பது நேற்று தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின் மாநாட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் தீர்மானங்கள் வாசிப்பு, மொழிப் போர் தியாகிகளின் படத்திறப்பு, திமுக முன்னணி தலைவர்கள் உரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலையில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திமுகவின் 2-வது இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம். இந்த தீர்மானத்தை மாநில இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். அதன்படி,
- இளைஞர் அணியின் மாநில மாநாட்டிற்கு அனுமதி அளித்த முதலமைச்சருக்கு நன்றி.
- தமிழ்நாடு முதன்மை மாநிலம் தொடர்ந்திட அயராது பாடுபடும் முதலமைச்சருக்கு இளைஞர் அணி என்று துணை நிற்கும்.
- மகளிர்க்கு கட்டணம் இல்ல பேருந்து பயணம் திட்டத்தை வழங்கிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு இந்த மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
- கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்தி ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்க செய்து உதவித்தொகை அல்ல உரிமை தொகை என அறிவித்த முதல்வருக்கு நன்றி.
- நீட் தேர்வு ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது.
- குலக்கல்வி முறையை புகுத்தும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து திமுக இளைஞரணி போராட்டம் நடத்தும்.
- கல்வி மற்றும் மருத்துவத்தை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
- முதலமைச்சரே பல்கலைக்கழக வேந்தர். ஆளுநர் பதவியில் நிரந்தரமாக அகற்ற வேண்டும்.
- நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் சர்வாதிகாரத்தை ஒழித்திடுவோம்.
- அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை கைப்பாவையாக்கிய மத்திய பாஜக அரசுக்கு கண்டனம்.
- இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக தான் என்பதை அமல்படுத்துவோம்.
- பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிரான பரப்புரையை திமுக இளைஞரணி முன்னெடுக்கும். உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.#DMKYW4StateRights | #Udhayanidhistalin | #mkstalin | #CMOTamilNadu | #DMK | #DMKYouthWingConference pic.twitter.com/yazVNVAjXa
— Dinasuvadu (@Dinasuvadu) January 21, 2024