ம.நீ.ம பொதுக்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்…!
கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்குதொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டம் தலைவா் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 500-க்கும் மேற்ப்பட்ட உறுப்பினா்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்தி சமஸ்கிருதம் மொழிகளை திணிக்க முயற்சிக்கும் பாஜக அரசுக்கு வன்மையாக கண்டனம், பொள்ளாட்சி வழக்கின் விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும், இறந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை.
கிராம சபை கூட்டம் நடத்தப்படாமல் இருப்பதை கண்டித்தும், எட்டு வழி சாலை போன்ற விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நமது கட்சியின் முதல் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த பத்திரிக்கை செய்தி. (2/2)#சீரமைப்போம்_தமிழகத்தை#தலைநிமிரட்டும்தமிழகம்#கமல்_காலத்தின்_கட்டாயம் pic.twitter.com/SH7omLUeHU
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) February 11, 2021
சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நிலைப்பாடு பற்றி முடிவு எடுக்க கமலஹாசனுக்கு பொதுக்குழு அதிகாரம். தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வென்று கமலை முதல்வராக பொறுப்பேற்க செய்வதே ஒவ்வொருவரின் கடமையாகும் என பொதுக்குழு தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக செயல்படவும் பொதுக்குழு அதிகாரம் அளித்துள்ளது.