#BREAKING: அரசு கலைக்கல்லூரிகளில் 25% கூடுதல் இடங்கள்- உயர்கல்வித்துறை அறிவிப்பு..!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் கலைப்பாடப் பிரிவுகளில் 25% கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் 2021-2022-ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்கள் கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. அறிவியல் பாடப் பிரிவுகளில் ஆய்வக வசதிக்கேற்ப கூடுதலாக 25 சதவீதம் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்களிடம் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.