தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

குறைந்த மழைப் பொழிவினால் அதிகமாக பயிர்சேதம் ஏற்பட்ட பகுதிகள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

2022-ல் குறைந்த மழைப்பொழிவு காரணத்தினால் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைந்த மழைப் பொழிவினால், 33%-க்கும் அதிகமாக பயிர்சேதம் ஏற்பட்ட பகுதிகள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சி பாதித்த பகுதிகள்:

  • சிவகங்கை – தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை.
  • புதுக்கோட்டை – ஆவுடையார்கோவில், மணமேல்குடி.
  • ராமநாதபுரம் – போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடனை.
  • தென்காசி – ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில்.
  • தூத்துக்குடி – ஆள்வார்திருநகரி.
  • விருதுநகர் – நரிக்குடி, திருச்சுழி ஆகிய பகுதிகள் வேளாண் வறட்சியால் பாதிப்புக்குள்ளான பகுதிகளாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…

20 minutes ago

வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

49 minutes ago

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

1 hour ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

3 hours ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

3 hours ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

4 hours ago